Monday, 9 July 2018

அதியமான் மகன் பொகுட்டெழினி History in Purananuru 102

எருதே இளைய நுகம் உணராவே

அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை 
ஔவையார் பாடியது.

இளமை நலமுள்ள எருதுக்கு நுகத்தின் பாரம் தெரியாது. 
வண்டியில் பாரம் அதிகம் என்று கருதாமல் இழுக்கும். 
உமணர் உப்பேற்றிச் செல்லும் வண்டி பள்ளத்தில் இறங்கும்போதும், மேட்டில் ஏறும்போதும் வண்டியின் பின்னால் தொங்கவிடப்பட்டிருக்கும் "சேம அச்சு" நுகத்தின் பாரம் குறையாமலும், கூடாமலும் பார்த்துக்கொள்ளும். 
அந்தச் சேம-அச்சு போன்றவன் பொகுட்டெழினி. 
நிறைநிலா போல இருள் இல்லாமல் குளுமையான ஒளி தந்து மக்களைக் காப்பாற்றுபவன். 


வண்டியின் பின்புறம் தொங்கும் சேம அச்சு - காண்க

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.