Monday, 9 July 2018

அதியமான் History in Purananuru 100

கையது வேலே காலது கழலே பனை

அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை 
ஔவையார் பாடியது.

அதியமான் தனக்குப் பிறந்திருக்கும் மகனைப் பார்த்தான். 
அப்போதும் தன் பகைவரை எண்ணிச் சிவந்த கண்ணிலுள்ள சினம் மாறவில்லை. 

  • கையில் வேல் 
  • காலில் வீரக்கழல் 
  • உடம்பில் வியர்வை 
  • கழுத்ததில் காயம் 
  • தலையில் இளம் பனங்குருத்துகளை ஊசியில் குத்தி செருகியிருக்கும் பித்தைக் கொண்டை (பனை சேரன் குடிப்பூ)
  • அந்தப் பித்தையில் வெட்சிப் பூவும் வேங்கைப் பூவும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்குன்றன 
இவற்றுடன் அதியமான் புலியைக் கொல்லும் ஆண்யானை போல் காணப்படுகிறான் 
தன் அன்பு மகனைப் பார்க்கும்போதும் தனக்குச் சினமூட்டித் தன்னோடு போரிட்ட பகைவர்மீது கொண்ட சினம் மாறாமல் சிவந்த கண்ணுடன் இருக்கிறான். 


வரிவயம் பொருத வயக்களிறு
புலியைக் கொல்லும் யானை

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.