Sunday, 20 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 254

34
உயர்திணையா, அஃறிணையா, ஆணா, பெண்ணா என, பால் தெரியாது
நீயிர் வந்தீர்
நீயிர் வந்தாய்

35
ஒருமை
நீ வந்தாய்

36
பன்மை
நீயிர் வந்தீர்

37
ஒருவன் வந்தான் - ஒருத்தி வந்தாள் என்பதனை 
ஒருவர் வந்தார்
என்று கூறலாம் 

38
ஒருவர் வந்தார்
இதில் 
ஒருவர் என்பது மதிப்புப் பன்மை


நூற்பா மூலம்                    

நீயிர் நீ என வரூஉம் கிளவி
பால் தெரிபு இலவே உடன் மொழிப் பொருள. 34

அவற்றுள்,
நீ என் கிளவி ஒருமைக்கு உரித்தே. 35

ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே. 36

ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இரு பாற்கும் உரித்தே தெரியும் காலை. 37

தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும். 38


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயர்ச்சொல்லின் இயல்பு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி