Saturday, 19 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 252

திணை - பால் விரவுப் பெயர்கள் 

26
உயர்திணை - அஃறிணைப் பெயர்கள்

சாத்தன் வந்தான் - ஒருவன்
சாத்தன் வந்தது - ஒன்று

27
இயற்பெயர் 
யானை வந்தது - ஒன்று
யானை வந்தன - பல

சினைமுதற்பெயர்
முடக்கொற்றன் வந்தான் - ஒருவன்
முடக்கொற்றன் வந்தது - ஒன்று

முறைப்பெயர்
தந்தை வந்தான் - ஒருவன்
தந்தை வந்தது - ஒன்று

28
ஒன்றன்பால் - பலவின்பால் - ஆண்பால் - பெண்பால்

யானை வந்தது
யானை வந்தன
யானை வந்தான்
யானை வந்தாள்

நெடுங்கழுத்தல் வந்தது
நெடுங்கழுத்தல் வந்தன
நெடுங்கழுத்தல் வந்தான்
நெடுங்கழுத்தல் வந்தாள்

பெருங்கால் யானை வந்தது
பெருங்கால் யானை  வந்தன
பெருங்கால் யானை வந்தான்
பெருங்கால் யானை வந்தாள்

29
உயர்திணை ஒருமைக்கும், அஃறிணை ஒருமைக்கும் பொது

கோதை வந்தது
கோதை வந்தான்
கோதை வந்தாள்

செவியிலி வந்தது
செவியிலி வந்தான்
செவியிலி வந்தாள்

கொடும்புற மருதி வந்தது
கொடும்புற மருதி வந்தான்
கொடும்புற மருதி வந்தாள்  

நூற்பா மூலம்                    

பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. 26

ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. 27

பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே ஒருவர் என்னும்
என்று இப் பாற்கும் ஓரன்னவ்வே. 28

ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே. 29

தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயர்ச்சொல்லின் இயல்பு)

நெடுங்கழுத்தி ஆக்குதல்

நெடுங்கழுத்தி ஆக்குதல்


No comments:

Post a Comment

Blog Archive

எழுத்துப் பிழை திருத்திசந்திப் பிழை திருத்தி
தமிழ் வலைப்பதிவு திரட்டி