Saturday, 19 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 251

இருதிணை விரவுப் பெயர்களின் பாகுபாடுகள்.

21

  • இயற்பெயர் 4
  • சினைப்பெயர் 4
  • சினைமுதற் பெயர் 
  • முறைப்பெயர் 

22
  1. பெண்மை இயற்பெயர்
  2. ஆண்மை இயற்பெயர்
  3. பன்மை இயற்பெயர்
  4. ஒருமை இயற்பெயர்
23
  1. பெண்மைச் சினைப்பெயர்
  2. ஆண்மைச் சினைப்பெயர்
  3. பன்மைச் சினைப்பெயர்
  4. ஒருமைச் சினைப்பெயர்
24

  1. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர்
  2. ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர்
  3. பன்மை சுட்டிய சினைமுதற் பெயர்
  4. ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர்

25

  1. பெண்மை முறைப்பெயர்
  2. ஆண்மை முறைப்பெயர்

நூற்பா மூலம்                    

அவற்றுள்,
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர்
நான்கு என மொழிமனார் சினைமுதற்பெயரே
முறைப்பெயர்க் கிளவி இரண்டு ஆகும்மே
ஏனைப் பெயரே தம்தம் மரபின. 21

அவைதாம்,
பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று
அந் நான்கு என்ப இயற்பெயர் நிலையே. 22

பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்
பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர் என்று
அந் நான்கு என்ப சினைப்பெயர் நிலையே. 23

பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே
ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரே
பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே
ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர் என்று
அந் நான்கு என்ப சினைமுதற்பெயரே. 24

பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று
ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே. 25


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயர்ச்சொல்லின் இயல்பு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி