Saturday, 19 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 250

இருதிணைப் பொதுப்பெயர்

இயற்பெயர் - சாத்தன், சாத்தி
சினைப்பெயர்  - முடவன், கண்ணன்
சினைமுதற் பெயர்  - சீத்தலைச் சாத்தன்
முறைப்பெயர் - தந்தை, தாய் 
தாம்
தான்
எல்லாம்
நீயிர்
நீர்

ஆகியவை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவானவை.

குழவி
மக
போன்ற பிறவும் இரு திணைக்கும் பொது.

நூற்பா மூலம்                    

இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயரே
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே
எல்லாம் நீயிர் நீ எனக் கிளந்து
சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு
அன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே. 20


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயரின் இயல்பு)

மக(வு)
தாய் மக
குருவி மக


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி