Saturday, 19 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 248

13
அது இது உது
அஃது இஃது உஃது
அவை இவை உவை
அவ் இவ் உவ் - இப்படி -  சுட்டு - 12 
யாது யா யாவை - வினா - 3

ஆக 15 அஃறிணைச் சொல்

14

  1. பல்ல 
  2. பல 
  3. சில 
  4. உள்ள 
  5. இல்ல 
  6. வருவ, செல்வ - என்பது போல் வரும் வினைப்பெயர். 
  7. கரிது, கரிய - என்பது போல் வரும் பண்புகொள் பெயர் 
  8. ஒன்று, பத்து - என்பது போல் வரும் எண்ணுப்பெயர் 
  9. பொன்னன்னது, பொன்னன்ன(வை) - என்பது போல் வரும் ஒப்பினாகிய பெயர்

என வரும் 9 வகை
அஃறிணைப் பெயர்கள்

15
காய்கள்
நாய்கள்
என்பது போல் ’கள்’ பெற்று வரும் சொற்கள் அஃறிணை

16
பிறிது, பிற
மற்றையது, மற்றையவை
இல்லது, போன்றது - என்பன போல் வரும் பிறவும் அஃறிணை.

17
குதிரை வந்தது
குதிரை வந்தன
இவை தெரிநிலை உடைய அஃறிணைப் பெயர்கள்
பயனிலையால் இவை ஒருமை, பன்மை உணர்த்தின.


நூற்பா மூலம்                    

அது இது உது என வரூஉம் பெயரும்
அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும்
அவை இவை உவை என வரூஉம் பெயரும்
அவை முதல் ஆகிய வகரப் பெயரும்
யாது யா யாவை என்னும் பெயரும்
ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
பால் அறி வந்த அஃறிணைப் பெயரே. 13

பல்ல பல சில என்னும் பெயரும்
உள்ள இல்ல என்னும் பெயரும்
வினைப் பெயர்க் கிளவியும் பண்பு கொள் பெயரும்
இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்
ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட
அப் பால் ஒன்பதும் அவற்று ஓரன்ன. 14

கள்ளொடு சிவணும் அவ் இயற்பெயரே
கொள் வழி உடைய பல அறி சொற்கே. 15

அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
என்ன பெயரும் அத் திணையவ்வே. 16

தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. 17


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயரின் இயல்பு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி