Friday, 18 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 246

திணை
பெயர் திணையை உணர்த்தும்.

6
உயர்திணைக்கு உரிய பெயர்
அஃறிணைக்கு உரிய பெயர்
இந்த இரண்டு திணைக்கும் உரிய பெயர்
என்று
பெயர் 3 வகைப்படும்.

7
இரண்டு திணைக்கும் பொதுப்பெயர்
சாத்தன் வந்தான்
இது
சாத்தன் என்பவன் வந்தான் என்றும்
சாத்தன் என்னும் காளை வந்தது என்றும்
என்று வரும்போது
ஆண்பாலுக்கு  உரிய ன்
உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வந்தது.

நூற்பா மூலம்                    

அவற்றுள்,
பெயர் எனப்படுபவை தெரியும் காலை
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம் மூ உருபின தோன்றல் ஆறே. 6

இரு திணைப் பிரிந்த ஐம் பால் கிளவிக்கும்
உரியவை உரிய பெயர்வயினான. 7


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயரின் இயல்பு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி