Friday, 18 May 2018

தொல்காப்பியம் பெயரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 244

சொல்லின் தன்மை
1
எல்லாச் சொல்லும் பொருளைக் குறிக்கும். அதாவது தெரிவிக்கும்.

2
பொருளைத் தெரிவித்தல்
இன்ன சொல் என்பதைத் தெரிவித்தல்
ஆகியவை சொல்லின் தன்மை.

3
வெளிப்படையாகப் பொருளைத் தெரிவித்தல்
குறிப்பால் பொருளைத் தோற்றுவித்தல்
என்று பொருள் தோன்றும் நிலை 2 வகைப்படும்.

அவன் வந்தான்  - இதில் பொருள் வெளிப்படையாகத் தோன்றுகிறது. 
உண்பவன் ஒருவன் "கல்லைக் கடிக்கும்படி நன்றாகச் சமைத்திருக்கிறாய்" என்று சொல்லும்போது நன்றாக என்பது குறிப்பால் வேறொரு பொருளை உணர்த்துகிறது. 


நூற்பா மூலம்                    

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. 1

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர். 2

தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
இரு பாற்று என்ப பொருண்மை நிலையே. 3


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 5 பெயரியல் (பெயரின் இயல்பு)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி