Saturday, 12 May 2018

தொல்காப்பியம் விளிமரபு மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 240

30
முறைப்பெயர் 
மகன் - மகனே
மருமகன் - மருமகனே
என விளி பெறும் 

31
விளி ஏலாப் பெயர்கள் 
அவன்
இவன்
உவன்
எவன்

32
அளபெடை
கோஒன் - கோஒன்
இயல்பு 
சாத்தன் என்னும் காளை
சாத்தன் என்னும் வீரன்
அஃறிணையையும் குறிக்கும்
உயர்திணைப் பெயர்
(விரவுப்பெயர்)

33
அஃறிணை விரவுப்பெயர் 
சாத்தன் - சாத்தா
சாத்தி  - சாத்தீ
தந்தை - தந்தாய்
தாய் - தாயே
கூந்தல் - கூந்தால்
மகள் - மகளே
என விளி ஏற்கும்

நூற்பா மூலம்                    

முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல. 30

சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்
முன் கிளந்தன்ன என்மனார் புலவர். 31

அளபெடைப் பெயரே அளபெடை இயல. 32

கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்கும் காலை. 33

தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 4 விளி மரபு (அழைக்கும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி