Friday, 11 May 2018

தொல்காப்பியம் விளிமரபு மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 236

11
ன ர ல ள
4 மெய்யெழுத்துக்கள் விளி பெறும்.

12
பிற மெய்யெழுத்துக்களில் முடியும் பெயர்கள் விளி ஏற்கமாட்டா

13
அன்
சோழன் - சோழா
சேர்ப்பன் - சேர்ப்பா
என விளி ஏற்கும்

14
அண்மைச்சொல் அன்
ஊரன் - ஊர
சேர்ப்பன் - சேர்ப்ப
என விளி ஏற்கும்

15
ஆன்
சேரமான் - சேரமான்
மலையமான் - மலையமான்
என இயல்பாக வரும்

16
தொழிலில் கூறும் ஆன்
உண்டான் - உண்டாய்
என விளி ஏற்கும்

17
பண்புப்பெயர் 
கரியன் - கரியாய்
செய்யன் - செய்யாய்
என விளி ஏற்கும்


18
அளபெடைப் பெயர் 
அழாஅன் - அழாஅன்
புழாஅன் - புழாஅன்
என இயல்பாக வரும்

19
முறைப்பெயர்
மகன் - மகனே
மருமான் - மருமானே
என விளி ஏற்கும்

நூற்பா மூலம்                    

ன ர ல ள என்னும் அந் நான்கு என்ப
புள்ளி இறுதி விளி கொள் பெயரே. 11

ஏனைப் புள்ளி ஈறு விளி கொள்ளா. 12

அன் என் இறுதி ஆ ஆகும்மே. 13

அண்மைச் சொல்லிற்கு அகரமும் ஆகும். 14

ஆன் என் இறுதி இயற்கை ஆகும். 15

தொழிலின் கூறும் ஆன் என் இறுதி
ஆய் ஆகும்மே விளிவயினான. 16

பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே. 17

அளபெடைப் பெயரே அளபெடை இயல. 18

முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே. 19

தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 4 விளி மரபு (அழைக்கும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி