Saturday, 5 May 2018

தொல்காப்பியம் வேற்றுமை மயங்கியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 220

வேற்றுமை 2 - 7 மயங்கல்

1
தூணைச் சார்ந்தான் \ செயல்படும் கருமச் சார்பு 
அரசனைச் சார்ந்தான் \ செயல் இல்லாத, கருமம் அல்லாத சார்பு
அரசரைச் சார்ந்தான்
அரசர்கண் சார்ந்தான்
என வரும் 
ஐ - 2 ஆம் வேற்றுமை
கண் - 7 ஆம் வேற்றுமை

2
கண்ணைக் குத்தினான்
கண்ணுள் குத்தினான்
ஐ - 2 ஆம் வேற்றுமை
கண் - 7 ஆம் வேற்றுமை

வேற்றுமை 6 வழி 2 

3
யானையது கோட்டைக் குறைத்தான்
அது - 6 ஆம் வேற்றுமை
ஐ - 2 ஆம் வேற்றுமை

2 வழி 7
4
யானையைக் கோட்டின்கண் குறைத்தான்

6 வழி 2
5
கோட்டது நுனியைக் குறைத்தான்


நூற்பா மூலம்                    

கருமம் அல்லாச் சார்பு என் கிளவிக்கு
உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை. 1

சினை நிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும்
வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர். 2

கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே. 3

முதற்சினைக் கிளவிக்கு அது என் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கு ஐ வருமே. 4

முதல் முன் ஐ வரின் கண் என் வேற்றுமை
சினை முன் வருதல் தெள்ளிது என்ப. 5


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 3 வேற்றுமை மயங்கியல் (வேற்றுமை உருபு தடுமாறல்)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி