Saturday, 5 May 2018

தொல்காப்பியம் வேற்றுமையியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 219

புறனடை

பெயரின் இறுதியில் வந்து நின்று பெயரை வேறுபடுத்தி வேற்றுமைப் பொருளை விரிக்கும் சொல் வேற்றுமை உருபு எனப்படும்.

இது வெளிப்பட்டு நின்றும், வெளிப்படாமல் தொகையாக நின்றும் வேற்றுமைப் பொருளை உணர்த்தும்.

குதிரைத் தேர்
என்னும்போது
குதிரையைப் பூட்டிய தேர்
என்று
ஐ என்னும் வேற்றுமை உருபு அல்லாதனவும் தொகையாக வரும்.

நூற்பா மூலம்                    

வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை
ஈற்று நின்று இயலும் தொகைவயின் பிரிந்து
பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும்
எல்லாச் சொல்லும் உரிய என்ப. 22


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 2 வேற்றுமை-இயல் (வேற்றுமை உணர்த்தும் பொருள்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.