Saturday, 5 May 2018

தொல்காப்பியம் வேற்றுமையியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 217

ஆறாம் வேற்றுமை

18
அது என்னும் பெயர் கொண்ட வேற்றுமை இது.
தன்னினதும், பிறிதினதுமாகிய உடைமையை
இதனது இது
என்று இது கூறும்

19
சாத்தனது இயல்பு \ இயற்கை
சாத்தனது உடைமை \ உடைமை
ஆவினது கன்று \ முறைமை
சாத்தனது உரிமை \ கிழமை
சாத்தனது செயல் \ செயற்கை
அவனது முதுமை \ முதுமை
அவனது செயல் \ வினை
சாத்தனது வாள் \ கருவி
அவனது துணை \ துணை 
சாத்தனது கலம் \ கலம் ஒற்றிக்கு வைக்கப்பட்ட பண்டம்
சாத்தனது முதல் \ முதல் 
யானையது கோடு \ உறுப்பு
படையது குழூஉ \ குழுமம்
கபிலரது பாட்டு  \ தெரிந்து மொழிச் செய்தி
சாத்தனது நிலை \ நிலை
சாத்தனது வாழ்ச்சி \ வாழ்ச்சி (= வாழ்வு, வாழ்த்து)
எள்ளினது சாந்து \ திரிந்து வேறுபட்டது 

நூற்பா மூலம்                    

ஆறாகுவதே,
அது எனப் பெரிய வேற்றுமைக் கிளவி
தன்னினும் பிறிதினும் இதனது இது எனும்
அன்ன கிளவிக் கிழமைத்து அதுவே. 18

இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்
செயற்கையின் முதுமையின் வினையின் என்றா
கருவியின் துணையின் கலத்தின் முதலின்
ஒருவழி உறுப்பின் குழுவின் என்றா
தெரிந்து மொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்
திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி
ஆறன் பால என்மனார் புலவர். 19

தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 2 வேற்றுமை-இயல் (வேற்றுமை உணர்த்தும் பொருள்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.