Saturday, 5 May 2018

தொல்காப்பியம் வேற்றுமையியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 216

ஐந்தாம் வேற்றுமை

ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்தலையும்
ஒன்றிலிந்து ஒன்றை விலக்கலையும் 
தொல்காப்பியர் ஐந்தாம் வேற்றுமை என்கிறார். 

16
ஐந்தாம் வேற்றுமையை இன்-வேற்றுமை என்பர். 
காக்கையிற் கரிது களம்பழம் 
இரு பொருத்திப் பார்க்கும் பொருளை உடையது. 
காக்கையின் \ இதனின்
கரிது \ இற்று
களம்பழம் \ இது 

17
காக்கையிற் கரிது களம்பழம் \ வண்ணம் 
இதனின் வட்டம் இது \ வடிவு 
இதனின் நெடிது இது \ அளவு 
இதனின் இனிது இது \ சுவை
இதனின் குளுமை இது \ தண்மை
இதனின் சூடு இது \ வெம்மை
கள்ளரின் அஞ்சும் \ அச்சம்

இதனின் நன்று இது \ நன்மை
இதனின் தீது இது \ தீமை
இதனின் சிறிது இது \ சிறுமை
இதனின் பெரிது இது \ பெருமை 
இதனின் வலிது இது \ வன்மை 
இதனின் மெல்லிது இது \ மென்மை
இதனின் கடிது இது \ கடுமை

இவனின் மூத்தான் இவன் \ முதுமை
இவனின் இளையான் இவன் \ இளமை
இவனின் சிறந்தான் இவன் \ சிறத்தல் 
இவனின் இழிந்தான் இவன் \ இழித்தல் 
இதனின் புதிது இது \ புதுமை 
இதனின் பழையது இது \ பழமை

இவனின் ஆயினான் இவன் \ ஆக்கம் 
இவனின் இலன் (வறுமையாளன்) இவன் \ இன்மை
இவனின் உடையன் இவன் \ உடைமை
இதனின் மணம் இது \ நாற்றம் 

ஊரின் தீர்ந்தான் \ நீக்கம் 
இவரின் பலர் இவர் \ பன்மை
இவரின் சிலர் இவர் \ சின்மை 
ஊரின் பற்று விட்டான் \ நீக்கம் 

கருவூரின் கிழக்கு \ கருவூரிலிருந்து கிழக்கு \ நீக்கம் 
முயற்சியிற் பிறத்தலின் ஒலி நிலையாது. \ நீக்கம் 


நூற்பா மூலம்                    

ஐந்தாகுவதே,
இன் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
இதனின் இற்று இது என்னும் அதுவே. 16


வண்ணம் வடிவே அளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை என்றா
முதுமை இளமை சிறத்தல் இழித்தல்
புதுமை பழமை ஆக்கம் என்றா
இன்மை உடைமை நாற்றம் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதல் என்று
அன்ன பிறவும் அதன் பால என்மனார். 17

தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 2 வேற்றுமை-இயல் (வேற்றுமை உணர்த்தும் பொருள்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.