Friday, 4 May 2018

தொல்காப்பியம் வேற்றுமையியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 215

நான்காம் வேற்றுமை

14
இதனைக் கு வேற்றுமை என்பர்.
கொடுக்கும் பொருள் எதுவாயினும் இது ஏற்கும்.

15
கருபிற்கு வேலி அதற்கு வினை உடைமை
சாத்தற்கு மகள் உடம்பட்டார் சான்றோர் அதற்கு உடம்படுதல்
சாத்தற்குப் படுபொருள் கொற்றன் அதற்குப் படு பொருள் 
தாலிக்குப் பொன் அது ஆகு கிளவி
கைக்கு யாப்புடையது கடகம் அதற்கு யாப்பு உடைமை 
கூழுக்குக் குற்றேவல் செய்யும் அதன் பொருட்டு ஆதல்
நாய்க்கு நட்பு உடையன் நட்பு 
மக்கட்குப் பகை பாம்பு பகை 
தாந்குக் காதலன் காதல் 
இவனுக்கு அவன் சிறந்தவன் சிறப்பு

நூற்பா மூலம்                    

நான்காகுவதே,
கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப் பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே. 14

அதற்கு வினை உடைமையின் அதற்கு உடம்படுதலின்
அதற்குப் படு பொருளின் அது ஆகு கிளவியின்
அதற்கு யாப்பு உடைமையின் அதன் பொருட்டு ஆதலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று
அப் பொருட் கிளவியும் அதன் பால என்மனார். 15


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 2 வேற்றுமை-இயல் (வேற்றுமை உணர்த்தும் பொருள்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.