Friday, 4 May 2018

தொல்காப்பியம் வேற்றுமையியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 214

கொத்தை (குருடன்)
மூன்றாம் வேற்றுமை

12
ஒடு வேற்றுமை என்பர்.
நாயால் கடி பட்டான் - வினை முதல்
வாளால் எறிந்தான் - கருவி

13
தச்சனால் செய்யப்பட்டது அதனின் இயறல்
வாயால் கடித்தான் அதன் தகு கிளவி
நாயால் கடிபட்டான் அதன் வினைப்படுதல்
வாணிகத்தால் ஆயினான் அதனின் ஆதல்
காணத்தால் (காசால்) கொண்ட அரிசி அதனின் கோடல்
எள்ளொடு கலந்த அரிசி அதனொடு மயங்கல்
சாத்தனொடு வந்த கொற்றன் அதனொடு இயைந்த ஒரு வினைக் கிளவி
மலையொடு பொருத யானை அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி
முத்தொடு முழா கோத்து அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை
கண்ணின் கொத்தை (குருடன்) இன்
காலான் முடவன் ஆன்
முயற்சியாற் பிறத்தலான் சொல் நிற்காது ஏது
இப்படி வரும் 

நூற்பா மூலம்                    

மூன்றாகுவதே,
ஒடு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனை முதற்று அதுவே. 12

அதனின் இயறல் அதன் தகு கிளவி
அதன் வினைப்படுதல் அதனின் ஆதல்
அதனின் கோடல் அதனொடு மயங்கல்
அதனொடு இயைந்த ஒரு வினைக் கிளவி
அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி
அதனொடு இயைந்த ஒப்பு அல் ஒப்பு உரை
இன் ஆன் ஏது ஈங்கு என வரூஉம்
அன்ன பிறவும் அதன் பால என்மனார். 13


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 2 வேற்றுமை-இயல் (வேற்றுமை உணர்த்தும் பொருள்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.