Friday, 4 May 2018

தொல்காப்பியம் வேற்றுமையியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 213

இரண்டாம் வேற்றுமை

10
இரண்டாம் வேற்றுமையின் உருபு -ஐ-
மரத்தைக் குறைத்தான் வினை
குழையை உடையன் வினைக்குறிப்பு 
ஆகியவற்றை ஏற்கும்.

11
ஊரைக் காக்கும் -ஒப்பு-
தாயை ஒக்கும் -ஒப்பு-
யானையை ஊரும் -ஊர்தி-
எயிலை இழைக்கும் -இழை-
கிளியை ஓப்பும் -ஓப்பு-
ஊரைப் புகழும் - புகழ்-
நாட்டைப் பழிக்கும் - பழி-

என்றா

ஊரைப் பெறும் - பெறல்- 
ஊரை இழக்கும் -இழவு-
மனைவியைக் காதலிக்கும் -காதல்-
படையை வெகுளும் -வெகுளி-
ஊரைச் செறும் -செறல்-
தாயை உவக்கும் -உவப்பு-
நூலைக் கற்கும் -கற்பு-

என்றா

ஞாணை (கயிற்றை) அறுக்கும் -அறுத்தல்-
மரத்தைக் குறைக்கும் -குறைத்தல்-
நெல்லைத் தொகுக்கும் -தொகுத்தல்-
வேலியைப் பிரிக்கும் -பிரித்தல்-
பொன்னை நிறுக்கும் -நிறுத்தல்-
அரிசியை அளக்கும் - அளவு-
பாக்கை எண்ணும் -அள-

என்றா

ஊரை யாக்கும் -யா-
வாய்க்காலைச் சாரும் -சார்-
நெறியைச் செல்லும் -செலவு-
சூதினைக் கன்றும் -கன்றல்-
செய்யை நோக்கும் -நோக்கல்-
கள்ளரை அஞ்சும் -அஞ்சல்-
நாட்டைச் சிதைக்கும் -சிதைப்பு-

பிற

விரலை முடக்கும்
நாக்கை வளைக்கும்

நூற்பா மூலம்                    

இரண்டாகுவதே,
ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ் வழி வரினும் வினையே வினைக்குறிப்பு
அவ் இரு முதலின் தோன்றும் அதுவே. 10

காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
ஓப்பின் புகழின் பழியின் என்றா
பெறலின் இழவின் காதலின் வெகுளியின்
செறலின் உவத்தலின் கற்பின் என்றா
அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்
நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா
யாக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்
நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா
அன்ன பிறவும் அம் முதற் பொருள
என்ன கிளவியும் அதன் பால என்மனார். 11


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 2 வேற்றுமை-இயல் (வேற்றுமை உணர்த்தும் பொருள்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.