Friday, 4 May 2018

தொல்காப்பியம் வேற்றுமையியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 212

எழுவாய் வேற்றுமை

4
பெயரில் எந்த மாற்றமும் இல்லாமல் அதன் செயலைக் குறிப்பிடுவது எழுவாய் வேற்றுமை என்கிறோம். பிற வேற்றுமைகளுக்கு இரண்டாவது, மூன்னாவது என்பது போன்று எண் குறிப்பிட்டமையால் இதனை முதல் வேற்றுமை எனவும் குறிப்பிடலாயினர். 

5
ஆ உண்டு  பொருண்மை சுட்டல்
ஆ செல்க வியங்கொள வருதல்
ஆ கிடந்தது வினை நிலை உரைத்தல்
ஆ எவன் (எங்கே) வினாவிற்கு ஏற்றல்
ஆ கரிது பண்பு கொள வருதல்
ஆ பல பெயர் கொள வருதல்

6
யானைக் கோடு உண்டு பொருண்மை சுட்டல்
யானைக் கோடு செல்க வியங்கொள வருதல்
யானைக் கோடு வீழ்ந்தது வினை நிலை உரைத்தல்
யானைக் கோடு யாது வினாவிற்கு ஏற்றல்
யானைக் கோடு வெளிது பண்பு கொள வருதல்
யானைக் கோடு பத்து பெயர் கொள வருதல்

7
பயனிலை வெளிப்படையாகத் தோன்றுமாறு பெயர் நிற்பதுதான் எழுவாய் வேற்றுமை.

8
உருபு எதுவும் எற்காமல் திரிபு இல்லாமல் பெயர் நிற்றல் வேண்டும்.

9
பெயரில் காலம் தோன்றாது.
தொழிலோடு ஒட்டிக்கொள்ளும்.

நூற்பா மூலம்                    

அவற்றுள்,
எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே. 4

பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினை நிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று
அன்றி அனைத்தும் பெயர்ப் பயனிலையே. 5

பெயரின் ஆகிய தொகையுமார் உளவே
அவ்வும் உரிய அப்பாலான. 6

எவ் வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ் இயல் நிலையல் செவ்விது என்ப. 7

கூறிய முறையின் உருபு நிலை திரியாது
ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப. 8

பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா
தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே. 9


தொல்காப்பியம் – 2 சொல்லதிகாரம் – 2 வேற்றுமை-இயல் (வேற்றுமை உணர்த்தும் பொருள்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.