Friday, 18 May 2018

காணாதான் Tirukkural 849

One reveals another man who did not know the matter, the matter that the former also did not see at all; the matter that he realize in his mind.
Saying unknown matter to the unknown is folly.

புல்லறிவாண்மை

Non-intelligence

காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் 
கண்டானாம் தான்கண்ட வாறு. 

காணாதான் கட்டுவான் தான் காணான் காணாதான் கண்டானாம் தான் கண்ட ஆறு. 

காணாதவனுக்குக் காட்டுவான் 
தான் அதனை கண்டதில்லை 
காட்டும் அந்தக் காணாதவன் கண்டிருக்கிறானாம் 
எதனை?
தான் கண்ட வழியை. 

இதனை இவ்வாறு புரிந்துகொள்ளலாம். 
1
என் மனத்தில் இருப்பது உனக்குத் தெரியாது. 
உன் மனத்தில் இருப்பது எனக்குத் தெரியாது. 
இன்னொருவன் மனத்தில் இருப்பது நமக்குத் தெரியாது. 
அவன் இன்னது நினைக்கிறான், நீ இன்னது நினைக்கிறாய் என்று சொன்னால், அது காணாதவனுக்குத் தான் காணாத ஒன்றைக் கண்டது போலக் கூறும் புல்லறிவு ஆகும். 
2
ஒரு வீட்டிலிருந்து ஒருவன் வெளியே வருவதை இருவர் பார்த்தனர். 
கணவன் இல்லாதபோது மனைவி மட்டும் இருந்த வீடு அது. 
பார்த்தவர்களில் ஒருவன் "அவன் அவளிடம் உறவாடிவிட்டு வருகிறான்" என்றான். 
பார்த்தவர்களில் மற்றொருவன் "அவன் அவளுக்கு அவள் கணவன் நிலையைச் சொல்லிவிட்டு வருகிறான்" என்றான். 
எது உண்மை? 
இவர்கள் இருவரும் அவரவர் மனம் கண்ட வழியைக் கூறினர். 
காணாததனைக் கூறினர்.
தன் மனம் கண்டவாறு கூறினர். 
இது புல்லறிவு. 

உரையாசிரியர்கள் கண்ட விளக்கம்

இது கொண்டது விடாமை என்னும் புல்லறிவு. - மணக்குடவர் உரை 
புல்லலறிவாளனுக்கு நல்லறிவு புகட்டுதல் முடியாத செயல் - பரிமேலழகர் உரை 
புல்லறிவாளனுக்குப் புகட்டுபவன் புல்லறிவாளன் - பரிதியார் உரை 
புல்லறிவாளன் தான் கற்றதைத் தான் உணர்ந்துகொண்ட புல்லறிவு வழியிலேயே பிறருக்கு எடுத்துரைப்பான். - காலிங்கர் உரை


காணாதான் காணாதவனுக்குக் காட்டும் கடவுள் 






No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி