Thursday, 17 May 2018

அருமறை Tirukkural 847

The non-intelligence reveals the secret to others, by which, he will receive great pain.

புல்லறிவாண்மை
Non-intelligence

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தமக்கு.

அரு மறை சோரும் அறிவிலான் செய்யும் பெரும் மிறை தானே தமக்கு. 

மறை சோரும் - என்பதற்கு
கேட்ட வேதப் பொருளைச் சோரவிடும் - என்கிறார் பரிமேலழகர்
அரிதாக எண்ணின மறைப்பொருளைச் சோரவிடும் - மணக்குடவர்
ரகசியத்தை அடக்கமாட்டான் - பரிதியார், காலிங்கர்

பிறருக்குத் தெரியாமல் மறைக்க வேண்டிய செய்தியை அறிவில்லாத புல்லறிவாளன் பிறரிடம் சொல்லி, தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்துகொள்வான்.

'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை; (கலித்தொகை 133) 

மறைக்க வேண்டுவனவற்றை மறைப்பது நிறைவுடைமை. 
புல்லறிவாளனிடம் நிறைவுடைமை இல்லை. 

மறை
பிறரிடம் சொல்லாதே 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி