Friday, 27 April 2018

தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 172

சுட்டு வினா

21
கொக்குக் கடிது
அல்வழிப் புணர்ச்சி என்றாலும் வல்லொற்றுத் தொடர்மொழி ஒற்று மிகும். 

22
ஆங்குக் கொண்டான்
ஆங்கு > அங்கு என்பன மெல்லொற்றுத்தொடர்க் குற்றிநலுகரம். 
அங்கு என்பது ஆங்கு என நீண்டு நின்றாலும் வல்லினம் வரின் ஒற்று மிகும்.

23
யாங்கு என்பது மெல்லொற்றுத் தொடர்மொழி
யாங்கு கொண்டான்
யாங்கு என்பது எவ்வாறு என்று பொருள் படும்போது இயல்பாக வரும். 

24
அங்குக் கொண்டான்
இங்குக் கொண்டான்
உங்குக் கொண்டான்
எங்குக் கொண்டான்
இந்த நான்கு சொற்களும் ஒற்று மிக்கு வரும். 

நூற்பா மூலம்                    

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. 21

சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும்
யா வினா முதலிய மென்றொடர் மொழியும்
ஆயியல் திரியா வல்லெழுத்து இயற்கை. 22

யா வினா மொழியே இயல்பும் ஆகும். 23

அந் நால் மொழியும் தம் நிலை திரியா. 24


தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 9 குற்றியலுகரப் புணரியல் (குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழிப் புணர்ச்சி)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி