Saturday, 21 April 2018

தொல்காப்பியம் புள்ளி மயங்கியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 126

ஞ ந மெய் இறுதி

1
உரிஞ்
இது உரிஞ்சுதலைக் குறிக்கும் தொழில்-பெயர்
உரிஞுக் கடிது - அல்வழிப் புணர்ச்சி
உரிஞுக் கடுமை - வேற்றுமைப் புணர்ச்சி 
சிறிது \ தீது \ பெரிது - ஒட்டிக்கொள்க 

2
உரிஞு ஞான்றது
ஞான்றது = விரிந்தது
அல்வழிப் புணர்ச்சி
நீண்டது \ மாண்டது - என்பனவற்றைப் பொருத்திக்கொள்க
உரிஞு ஞாற்சி
வேற்றுமைப் புணர்ச்சி 
சீட்சி \ மாட்சி - என்பனவற்றைப் பொருத்திக்கொள்க

3
பொருநுக் கடிது
பொருந் = நடிப்பு 
அல்வழிப் புணர்ச்சி

4
பொருநுக் கடுமை
வேற்றுமைப் புணர்ச்சி 
ஞாற்சி \ நீட்சி \ வலிமை - என்பனவற்றையும் பொருத்திக் கொள்க. 

நூற்பா மூலம்                    

126
ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்
வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே
உகரம் வருதல் ஆவயினான. 1

ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும். 2

நகர இறுதியும் அதன் ஓரற்றே. 3

வேற்றுமைக்கு உக் கெட அகரம் நிலையும். 4


தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 8 புள்ளி மயங்கியல் (மெய்யில் முடியும் நிலைமொழிப் புணர்ச்சி)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி