Saturday, 21 April 2018

தொல்காப்பியம் உயிர்மயங்கியல் மூலமும் செய்தியும் Tolkappiyam Verse and Notes 118

எ ஒ இறுதி

70
எ ஒ எழுத்து சொல்லில் முடியும் எழுத்தாக வருவதில்லை
என்றாலும்
ஏஎ என்று முன்னிலையில் இருக்கும் ஒருவனை அழைக்கும்போதும்
ஓஒ என்று சிறப்புக் குறிப்பு வரும்போதும்
வருஉம்.
ஏஎ கொண்டான்
ஓஒ கொண்டான்
செஎன்றான் \ தந்தன் \ போயினான் 
என ஒட்டிக்கொள்க. 

71
யானேஎ கொண்டேன்
ஏ - தேற்றம்
ஓஒ கொண்டான்
ஓ - சிறப்பு

நூற்பா மூலம்

118
எகர ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா
முன்னிலை மொழிய என்மனார் புலவர்
தேற்றமும் சிறப்பும் அல் வழியான. 70

தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்
மேற் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா. 71

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 7 உயிர் மயங்கியல் (உயிரில் முடியும்  நிலைமொழிப் புணர்ச்சி)

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி