Tuesday, 17 April 2018

தொல்காப்பியம் அளவு நிறை எண் பெயர்கள் Tolkappiyam Tamil Linguistics 73

அளவு
நிறை
எண்
அளவைப் பெயர்கள்

உயிர் இறுதி
மெய் இறுதி

எதனைப் பெற்றிருந்தாலும்
ஏ என்னும் சாரியை பெற்றுப் புணரும்.

முகத்தலளவைப் பெயர்கள் 
உழக்கு - உழக்கேயாழாக்கு < உழக்கு ஏ ஆழாக்கு
கலன் - கலனேபதக்கு < கலன் ஏ பதக்கு

நிறைப்பெயர்
தொடி - தொடியே கஃசு < தொடோ ஏ கஃசு
கொள் - கொள்ளே ஐயவி
கொள், ஐயவி என்னும் வெண்சிறு கடுகு ஆகியவை நிறுக்கப் பயன்படுத்தப்படும் அளவைப் பொருள்கள் 

எண்ணுப் பெயர் 
காணியேமுந்திரிகை < காணி ஏ முந்திரிகை
காலேகாணி < கால் ஏ காணி

 கீழ்வாய்ச் சிற்றிலக்கம் 

நூற்பா மூலம்

உயிரும் புள்ளியும் இறுதி ஆகி
அளவும் நிறையும் எண்ணும் சுட்டி
உள எனப்பட்ட எல்லாச் சொல்லும்
தம்தம் கிளவி தம் அகப்பட்ட
முத்தை வரூஉம் காலம் தோன்றின்
ஒத்தது என்ப ஏ என் சாரியை. 22


தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 5 தொகைமரபு (சொல்லும் சொல்லும் சேர்ந்து தொகையாகும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.