Tuesday, 17 April 2018

தொல்காப்பியம் இ ஐ ஏழாம் வேற்றுமை Tolkappiyam Tamil Linguistics 70

இ முடிபு கொண்ட சொல்

பருத்தி குறிது
பருத்தி சிறிது
பருத்தி தீது
பருத்தி பெரிது  * இவை இயல்பு

அலிக்கொற்றன்
புலிக்கொற்றன் * இவை மிகுதி

கிளி குறிது * கிளிக் குறிது
கிளி சிறிது * கிளிச் சிறிது
கிளி தீது *  கிளித் தீது
கிளி பெரிது * கிளிப் பெரிது ** இவை உறழ்வு

ஐ முடிபு கொண்ட சொல்

அரை குறிது
அரை சிறிது
அரை தீது
அரை பெரிது ** இயல்பு அரை மரம்

தினை குறிது * தினைக் குறிது
தினை சிறிது * தினைச் சிறிது
தினை தீது * தினைத் தீது
தினை பெரிது * தினைப் பெரிது ** உறழ்ச்சி  (16)

இ ஐ ஈறு -  ஏழாம்  வேற்றுமை முடிபு

அதோளிக் கொண்டான்
இதோளிக் கொண்டான்
உதோளிக் கொண்டான்
எதோளிக் கொண்டான்

அதோளிச் சென்றான்
இதோளிச் சென்றான்
உதோளிச் சென்றான்
எதோளச் சென்றான்

ஆண்டைக் கொண்டான்
ஈண்டைக் கொண்டான்
ஊண்டைக் கொண்டான்
யாண்டைக் கொண்டான்

ஆண்டைச் சென்றான்
ஈண்டைச் சென்றான்
ஊண்டைச் சென்றான்
யாண்டைச் சென்றான்

இப்படியே
தந்தான்
போயினான்
என்பனவற்றையும் புணர்த்திக்கொற்க. (17)

நூற்பா மூலம்


வேற்றுமை அல்வழி இ ஐ என்னும்
ஈற்றுப் பெயர்க் கிளவி மூ வகை நிலைய
அவைதாம்,
இயல்பு ஆகுநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழ் ஆகுநவும் என்மனார் புலவர். 16

சுட்டு முதல் ஆகிய இகர இறுதியும்
எகர முதல் வினாவின் இகர இறுதியும்
சுட்டுச் சினை நீடிய ஐ என் இறுதியும்
யா என் வினாவின் ஐ என் இறுதியும்
வல்லெழுத்து மிகுநவும் உறழ் ஆகுநவும்

சொல்லிய மருங்கின் உள என மொழிப. 17

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 5 தொகைமரபு (சொல்லும் சொல்லும் சேர்ந்து தொகையாகும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.