Tuesday, 17 April 2018

தொல்காப்பியம் இரண்டாம் வேற்றுமை Tolkappiyam Tamil Linguistics 69

அனைத்தும் இரண்டாம் வேற்றுமை

விளக் குறைத்தான்
விள என்பது விளாமரத்தைக் குறிக்கும் அஃறிணைச் சொல். இங்கு ஒற்று வரக்கூடாது. வல்லினம் வந்துள்ளது.
மெல்லெழுத்து மிகு வழி வலிப்பொடு தோன்றலும்

மரங் குறைத்தான்
மரம் அஃறிணை - மிக்கூடாது - மென்மை மிக்கது 
வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடு தோன்றலும்

தாய்க்கொலை
தாய் உயர்திணை - மிகக் கூடாது - மிமுந்துள்ளது
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்

வண்டு கொணர்ந்தான்
வண்டு அஃறிணை சாரியை பெறவேண்டும். பெறவில்லை 
சாரியை உள் வழிச் சாரியை கெடுதலும்

வண்டினைக் கொணர்ந்தான்
சாரியை பெற்று வந்துள்ளது 
சாரியை இயற்கை உறழத் தோன்றலும்

புலி குறைத்தான் * புலிக் குறைத்தான்
பூல் குறைத்தான் * பூற் குறைத்தான்
சாரியை இயற்கை உறழத் தோன்றலும்

நம்பியைக் கொணர்ந்தான்
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்

கொற்றனைக் கொணர்ந்தான்
அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ் இயல் நிலையலும்

மண் கொணர்ந்தான்


மட் கொணர்ந்தான் என வரவேண்டியது 
மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும்

கழி குறைத்தான்
தினை பிளந்தான்
பிற

நூற்பா மூலம்

மெல்லெழுத்து மிகு வழி வலிப்பொடு தோன்றலும்
வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடு தோன்றலும்
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
உயிர் மிக வரு வழி உயிர் கெட வருதலும்
சாரியை உள் வழிச் சாரியை கெடுதலும்
சாரியை உள் வழித் தன் உருபு நிலையலும்
சாரியை இயற்கை உறழத் தோன்றலும்
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்
அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ் இயல் நிலையலும்
மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும்
அன்ன பிறவும் தன் இயல் மருங்கின்
மெய் பெறக் கிளந்து பொருள் வரைந்து இசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபு என மொழிப. 15


தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 5 தொகைமரபு (சொல்லும் சொல்லும் சேர்ந்து தொகையாகும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.