Tuesday, 17 April 2018

தொல்காப்பியம் உயர்திணைப் பெயர் Tolkappiyam Tamil Linguistics 67

உயர்திணைப் பெயர்
உயிர் எழுத்தில் முடிந்தாலும்,
மெய்யெழுத்தில் முடிந்தாலும்
வேற்றுமைப் பொருளில் வந்தாலும்
அல்வழிப் பொருளில் வந்தாலும்
எல்லா இடங்களிலும் இயல்பாகவே புணர்ச்சி நிகழும். (11)

கந்தன் கருணை (வேற்றுமை)
கந்தன் பெரியன் (அல்வழி)
மெய் முடிபு

வள்ளி காதல் (வேற்றுமை)
வள்ளி தந்தாள் (அல்வழி)
உயிர் முடிபு

இ எழுத்தில் முடியும் உயர்திணைச் சொல் திரியவும் செய்யும் (12)

குமரி கோட்டம் (கோயில்)
குமரிக் கோட்டம்

சாத்தன் என்னும் சொல் சாத்தன் என்பானையும் காளையையும் குறிக்கும்.
சாத்தி என்னும் சொல் சாத்தி என்பாளையும் பசுவையும் குறிக்கும்.
தாய், தந்தை என்பவை மக்களுக்கும், விலங்கினத்துக்கும் பொது.
எனவே இவை திணை விரவுப் பெயர்கள்.
இவை இயல்பாகவும் வரும். (13)

சாத்தி பெரியள் * சாத்தி கண்
சாத்தி பெரிது * சாத்தி கண்

நூற்பா மூலம்

உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும்
புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்
எல்லா வழியும் இயல்பு என மொழிப. 11

அவற்றுள்,
இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே. 12


அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே. 13

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 5 தொகைமரபு (சொல்லும் சொல்லும் சேர்ந்து தொகையாகும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.