Tuesday, 17 April 2018

தொல்காப்பியம் முன்னிலைக்கிளவி Tolkappiyam Tamil Linguistics 66

ஔவு கொற்றா * ஔவுக்கொற்றா
ஔவு சாத்தா * ஔவுச் சாத்தா
ஔவு தேவா * ஔவுத் தேவா
ஔவு பூதா * ஔவுப் பூதா
ஔ என்னும் முன்னிலை உறழ்
ஔ = பொறாமை கொள்

கௌவு கொற்றா * கௌவுக் கொற்றா
கௌவு சாத்தா * கௌவுச் சாத்தா
கௌவு தேவா * கௌவுத் தேவா
கௌவு பூதா * கௌவுப் பூதா
கௌ என்பது ஔ உயிரில் முடியும் முன்னிலைச் சொல் - உறழ்.
கௌ = வாயில் கௌவு

உரிஞு கொற்றா * உரிஞுக் கொற்றா
உரிஞு சாத்தா * உரிஞுச் சாத்தா
உரிஞு தேவா * உரிஞுத் தேவா
உரிஞு பூதா * உரிஞுப் பூதா
ஞ மெய்யில் முடியும் உரிஞ் என்னும் முன்னிலை ஏவல் - உறழ்
உரிஞ்சிக் குடி

பொருநு கொற்றா * பொருநுக் கொற்றா
பொருநு சாத்தா * பொருநுச் சாத்தா
பொருநு தேவா * பொருநுத் தேவா
பொருநு பூதா * பொருநுப் பூதா
ந மெய்யில் மெய்யில் முடியும் பொருந் என்னும் முன்னிலை ஏவல் - உறழ்
பொருந் = நடித்தல் 

திருமு கொற்றா * திருமுக் கொற்றா
திருமு சாத்தா * திருமுச் சாத்தா
திருமு தேவா * திருமுத் தேவா
திருமு பூதா * திருமுப் பூதா
ம மெய்யில் முடியும் திரும் என்னும் முன்னிலை ஏவல் - உறழ்
திரும் = திரும்பு

தெவ்வு கொற்றா * தெவ்வுக் கொற்றா
தெவ்வு சாத்தா * தெவ்வுச் சாத்தா
தெவ்வு தேவா * தெவ்வுத் தேவா
தெவ்வு பூதா * தெவ்வுப் பூதா
வ மெய்யில் முடியும் தெவ் என்னும் முன்னிலை ஏவல் - உறழ்
தெவ் = பகை கொள்

கூடு கொற்றா * கூடுக் கொற்றா
கூடு சாத்தா * கூடுச் சாத்தா
கூடு தேவா * கூடுத் தேவா
கூடு பூதா * கூடுப் பூதா
கூடு என்பது குற்றியலுகர முன்னிலை வினை - உறழ்

ஒற்று மிகும் வழக்கு தொல்காப்பியர் காலத்தது. 
இக்காலத்து வழக்கு ஒற்று மிகா இயல்பு மட்டுமே.

நூற்பா மூலம்


ஔ என வரூஉம் உயிர் இறு சொல்லும்
ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும்
குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. 10

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 5 தொகைமரபு (சொல்லும் சொல்லும் சேர்ந்து தொகையாகும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.