Tuesday, 17 April 2018

தொல்காப்பியம் முன்னிலைக் கிளவி Tolkappiyam Tamil Linguistics 65

எறி கொற்றா
எறி சாத்தா
எறி தேவா
எறி பூதா
உயிரில் முடியும் இவை இயல்பு

உண் கொற்றா
உண் சாத்தா
உண் தேவா
உண்  பூதா
மெய்யில் முடியும் இவை இயல்பு.

நட கொற்றா * நடக்கொற்றா
நட சாத்தா * நடச்சாத்தா
நடதேவா * நடத்தேவா
நடபூதா * நடப்பூதா
உயிரில் முடியும் இவை உறழ்.

ஈர்கொற்றா * ஈர்க்கொற்றா
ஈர்சாத்தா * ஈர்ச்சாத்தா
ஈர்தேவா * ஈர்த்தேவா
ஈர் பூதா * ஈர்ப் பூதா
மெய்யில் முடியும் இவை உறழ்.

நூற்பா மூலம்


உயிர் ஈறு ஆகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பு ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று
ஆயீர் இயல வல்லெழுத்து வரினே. 9


தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 5 தொகைமரபு (சொல்லும் சொல்லும் சேர்ந்து தொகையாகும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.