Monday, 16 April 2018

தொல்காப்பியம் உடம்படுமெய் Tolkappiyam Tamil Linguistics 58

நிலைமொழி மெய்யெழுத்தில் முடிந்து, உயிரெழுத்தை முதலாக உடைய வருமொழி வந்து அதனோடு சேருமானால், மெய்யெழுத்தோடு உயிரெழுத்து இணைந்துவிடும். (36)
ஆல் அடை > ஆலடை ஆலம் இலை
சிவணும் = இணையும்
சிவன் = அம்மையப்பன்

உயிரை விட்டு விலகிவிட்டால் மெய் புள்ளி கொண்ட தன் உருவத்தைப் பெற்றுவிடும். (37)
பாலடை < பால் அடை பாலில் கட்டியிருக்கும் அடைப்பாடை
புளியங்கோடு

உயிரும் சேரமுடியாது.
இடையே இரண்டுக்கும் உடனபாடுள்ள ஒரு உடம்படுமெய் ஆசாகத் தோன்றும். (38)
புளி ய் அம் கோடு > புளியங்கோடு புளியங்கிளை
எரு வ் அம் குழி > எருவங்குழி எருக்குழி 
விள வ் அத்து கொட்கும் > விளவத்துக் கொட்கும் விளா மரத்தடியில் சுழன்றுகொண்டிருக்கும்

நூற்பா மூலம்

புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது
மெய்யொடும் சிவணும் அவ் இயல் கெடுத்தே. 36

மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும். 37

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே
உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். 38


தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 3 புணரியல் (சொல்லும் சொல்லும் புணரும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.