Monday, 16 April 2018

தொல்காப்பியம் எழுத்துச் சாரியை Tolkappiyam Tamil Linguistics 57

எழுத்துக்களுக்குச் சொல் உருவம் கொடுக்கும்போது சில வகையான சாரியைகள் சேர்க்கப்படும்.
காரம்
கரம்
கான்
என்பன அந்தச் சாரியைகள். (32)

நெடில் எழுத்துக்களுக்குக் கரம், கான் சாரியைகளைச் சேர்ப்பதில்லை. (33)

குறில் எழுத்துக்கு மூன்று சாரியைகளும் சேரும்.
அகாரம்
அகரம்
அஃகான்
என வரும். (34)

ஐ ஔ நெடில் எழுத்துக்களுக்கு ‘கான்’ என்னும் சாரியை வரும்.
ஐகான்
ஔகான்
என வரும் (35)

நூற்பா மூலம்

காரமும் கரமும் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை. 32

அவற்றுள்,
கரமும் கானும் நெட்டெழுத்து இலவே. 33

வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய. 34

ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும். 35


தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 3 புணரியல் (சொல்லும் சொல்லும் புணரும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.