Monday, 16 April 2018

தொல்காப்பியம் சாரியையின் செயல் Tolkappiyam Tamil Linguistics 55

சாரியை என்ன செய்யும்?

வேற்றுமை உருபு புணரும்போது சொல் சிதைந்தால் சாரியை வரும்.
வரும்போது அதன் பொருள் எதுவும் விளங்காது.
பெயருக்கும் வேற்றுமை உருபுக்கும் இடையே நிற்கும்.
வேற்றுமை உருபானது பெயரும் வினையும் பிரிந்திருக்குமாறு பேசும்போது வரும்.
ஒட்டுதற்கு உரிய வழக்கோடு வரும்.

இப்படிப்பட்ட சாரியை இடையில் தோன்றும்.
தோன்றாமலும் இருக்கும்.

மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஒடு வரும்போது இது நிகழும்.

சேரனொடு, சோழனொடு பாண்டியன் வந்தான். (ஒட்டுதற்கு உரிய வழக்கு)
சேரன், சோழன், பாண்டியன் வந்தனர். (தோற்றம் வேண்டாத் தொகுதி)

நூற்பா மூலம்

பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப
வேற்றுமை உருபு நிலைபெறு வழியும்
தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும்
ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி
சொற் சிதர் மருங்கின் வழி வந்து விளங்காது
இடை நின்று இயலும் சாரியை இயற்கை
உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும். 30


தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் – 3 புணரியல் (சொல்லும் சொல்லும் புணரும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.