Sunday, 15 April 2018

தொல்காப்பியம் அந்தணர் மறை Tolkappiyam Tamil Linguistics 36

எல்லா எழுத்துக்களும் பிறக்கும் இடங்கள் பற்றியும், காற்று பிறந்து வெளிப்பட்டு உரசும் பாங்கு பற்றியும் வெளிப்படையாகச்  சொல்லக்கூடிய அளவில் இங்குச் சொல்லப்பட்டன.
உள்ளே தோன்றும் காற்றின் அளபு பற்றிய செய்தி இங்குக் கூறப்படவில்லை.
அந்தணர் மறையில் காற்றின் அளபு கூறப்பட்டுள்ளது.

அந்தணர் = உள்ளுணர்வாள்ளர் (அந்து அணர் - அந்தில் என்னும் இடைச்சொல் தொல்காப்பியம் இடையியலில் கூறப்பட்டுள்ளது)

நூற்பா மூலம்

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில் தப நாடி
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே. 20

அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 21

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.