Saturday, 14 April 2018

தொல்காப்பியம் சார்பெழுத்து Tolkappiyam Tamil Linguistics 35

குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பவை சார்பெழுத்துக்கள்.
இவை பிற எழுத்துக்களைச் சார்ந்து வரும்போது பிறப்பவை.
இவற்றிற்கு என்று தனிப் பிறப்பிடம் இல்லை.
சார்ந்து வரும் ஒலிகளோடு ஒத்து இயங்கிப் பிறக்கும். 

நூற்பா மூலம்

சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும். 19

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.