Saturday, 14 April 2018

தொல்காப்பியம் உயிர் ஒலி Tolkappiyam Tamil Linguistics 25

இவ்வாறு முந்தும் காற்று தொண்டையிலிருந்து வெளிப்படும்போது 12 உயிரெழுத்தும் பிறக்கும். (2)
அப்போது, வாய் அங்காந்தால் அ ஆ ஆகிய இரண்டு எழுத்தும் பிறக்கும். (3)
இ ஈ எ ஏ ஐ என்னும் 5 எழுத்துக்களும் பல்லின் அடியில் நாக்கின் விளிம்பு பொருந்தும் ஒருவகை நிகழ்வால் பிறக்கும். (4)
உ ஊ ஒ ஓ ஔ என்னும் 5 எழுத்தும் வாயின் இதழ் குவியும் நிகழ்வால் பிறக்கும். (5)
இந்த நிகழ்வுகளில் சிறு சிறு மாறுபாடுகள் தோன்றும்போது வெவ்வேறு எழுத்தொலி பிறக்கும். (6)


நூற்பா மூலம்

அவ் வழி,
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 2

அவற்றுள்,
அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும். 3

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்ன
அவைதாம்,
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய. 4

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5

தம்தம் திரிபே சிறிய என்ப. 6

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 பிறப்பியல்  (வாயில் எழுத்தொலி பிறக்கும் பாங்கு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.