Saturday, 14 April 2018

தொல்காப்பியம் மொழியிறுதி உயிர் Tolkappiyam Tamil Linguistics 21


  • உயிரெழுத்து வரிசை – ஔ நீங்கலாக ஆஅ, ஆ, ஈஇ, ஈ, ஊஉ, ஊ, ஏஎ, ஏ (அம்பு), ஐ, ஓஒ, ஓ என முடியும் (69)
  • கௌ (கௌவுதல்), வௌ (வௌவுதல்) என்று இரண்டு எழுத்துக்களோடு மட்டும் க வ எழுத்து மொழியிறுதி எழுத்தாக வரும். (70)
  • எ எழுத்தோடு கூடிய உயிர்மெய் எதுவும் மொழியின் முடிவாக வராது. (71)
  • ந வரிசையில் நொ (துன்புறுத்து) எழுத்து மட்டும் மொழியிறுதி எஎழுத்தாக வரும். (72)
  • ஞே ஞோ என முடியும் சொல் இல்லை (73)
  • நு நூ என முடியும் சொல் இல்லை (74)
  • உசு, முசு என்னும் இரண்டு சொற்கள் மட்டுமே ச வரியில் முடியும் சொற்களாக உள்ளன, (75)
  • தபு என முடியும் ஒரு சொல் மட்டுமே ப வரிசையில் உண்டு. (76)


நூற்பா மூலம்

உயிர், `ஒள' எஞ்சிய இறுதி ஆகும்.     69.  
         
கவவொடு இயையின், ஒளவும் ஆகும்.  70.  
         
எ என வரும் உயிர் மெய் ஈறாகாது.    71.  
         
ஒவ்வும் அற்றே, `ந' அலங்கடையே.    72. 
         
ஏ, ஓ, எனும் உயிர் ஞகாரத்து இல்லை. 73.  
         
உ, ஊகாரம் நவவொடு நவிலா.    74.  
         
உச் சகாரம் இருமொழிக்கு உரித்தே.     75. 
         
உப் பகாரம் ஒன்று' என மொழிப;
இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே.  76.  
         
எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே.    77. 

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.