Saturday, 14 April 2018

தொல்காப்பியம் மொழிமுதல் எழுத்து Tolkappiyam Tamil Linguistics 19


அடை
ஆடை
இலை
ஈயம்
உடை
ஊதல்
எலி
ஏணி
ஐந்து
ஒன்று
ஓடம்
ஔவை – என 12 உயிரும் சொல்லின் முதல் எழுத்தாக வரும். (59)

மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்தாக இல்லாவிட்டால் சொல்லின் முதல் எழுத்தாக வராது. (60)

க – கலை, காளை, கிளி, கீற்று, குடை, கூடை, கெண்டை, கேழல், கைதை, கொடை, கோடை, கௌவை
த – தலை, தாடி, தினை, தீமை, துடி, தூண்டில், தெங்கு, தேன், தையல், தொடை, தோள், தௌவை (அக்கா)
ந – நண்டு, நாடு, நிழல், நீச்சல், நுங்கு, நூழில், நெற்று, நேற்று, நைவளம் (ஒருவகைப் பண்) நொண்டி, நோதல், நௌவி (மான்)
ப – படை, பாம்பு, பிழை, பீழை, புழல், பூட்டு, பெட்டி, பேடி, பையல், பொடி, போக்கு, பௌவம் (அலை),
ம – மழை, மாடு, மிடறு, மீன், முடம், மூட்டு, மெலிவு, மேனி, மையல், மொட்டு, மோதகம் (வடை) மௌவல்
என 5 எழுத்தும் 12 உயிரோடும் சொல்லின் முதல் எழுத்தாக வரும். (61)

ச வரிசை – ச சை சௌ எழுத்து மொழி முதலில் வராது.
சாலை, சிலை, சீற்றம், சுளை, சூளை, செடி, சேலை, சொல், சோறு (62)

வ வரிசை – வு, வூ, வொ, வோ – மொழி முதலாக வராது.
வளை, வாளை, விலை, வீடு, வெற்றி, வேம்பு, வைப்பு, வௌவால் (63)

ஞ வரிசை – ஞா, ஞெ, ஞொ எழுத்துக்கள் மட்டும் மொழிமுதலாக வரும்.
ஞாலம், ஞெகிழி (தீப்பந்தம்), ஞொள்கிற்று (நொந்தது) (64)
ய வரிசை – யா மட்டும் மொழிமுதலாக வரும்.
யானை (65)

முதலாகாது என்று சொல்லப்பட்ட பிற எழுத்துக்களும் தன் பெயரைக் குறிக்குமாயின் முதல்  எழுத்தாக வரும்.
ழகரம் (66)


நூற்பா மூலம்

மொழிமுதல் எழுத்துக்கள்

பன்னீர்-உயிரும் மொழி முதல் ஆகும்.  59.  

உயிர்மெய் அல்லன மொழி முதல் ஆகா.     60.  

க, த, ந, ப, ம, எனும் ஆவைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே.     61.  

சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே-
அ, ஐ, ஒள, எனும் மூன்று அலங்கடையே.   62.  

உ, ஊ, ஒ, ஓ, என்னும் நான்கு உயிர்
`வ' என் எழுத்தொடு வருதல் இல்லை.  63.  

ஆ, எ, ஒ, எனும் மூஉயிர் ஞகாரத்து உரிய    64.  

ஆவொடு அல்லது யகரம் முதலாது.    65.  

முதலா ஏன தம் பெயர் முதலும். 66.  

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.