Saturday, 14 April 2018

தொல்காப்பியம் எழுத்தின் இயல்பு Tolkappiyam Tamil Linguistics 17

செய்யுளின் இறுதியில் போலும் என்னும் சொல் வருமானால், போன்ம் என இரண்டு ஒற்றெழுத்து இணைந்து நிற்கும்.
வாள் பொரு வானத்து, அரவின் வாய்க் கோட்பட்டுப்  
போதரும் பால் மதியும் போன்ம்! – கலித்தொகை 105 (51)

போன்ம் என்னும்போது ம் ஒலி அரை மாத்திரைக்குக் குறையும். (52)

ஆ என்பது பசுவைக் குறிக்கும் ஒரு மொழி (சொல்)
ஆ என்பது ஒரு எழுத்து.
எப்படி எடுத்துக்கொண்டாலும் எழுத்தின் இயல்பாகிய இரண்டு மாத்திரையிலிருந்து திரிவது இல்லை. (53)



நூற்பா மூலம்

செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின்
னகார, மகாரம் ஈர் ஒற்று ஆகும்.  51.  
         
னகாரை முன்னர் மகாரம் குறுகும்.     52.  
         
மொழிப்படுத்து இசைப்பினும், தெரிந்து வேறு இசைப்பினும்,
எழுத்து இயல் `திரியா' என்மனார் புலவர்.   53.    

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.