Saturday, 14 April 2018

தொல்காப்பியம் ய ர ழ Tolkappiyam Tamil Linguistics 15

[ய்] [ர்] [ழ்] ஒற்றில் முடியும் சொல்
க ச த ப ங ஞ ந ம வந்து சேரும்போது
இரண்டு ஒற்றுகள் சேர்ந்து நிற்கும்.

வேய் (மூங்கில்)
வேய்க்குறை, வேய்ங்குறை, வேய்ச்சிறை, வேய்ஞ்சிறை, வேய்த்தலை, வேய்ந்தலை, வேய்ப்புறம், வேய்ம்புறம்
வேர்
வேர்க்குறை, வேர்ங்குறை, வேர்ச்சிறை, வேர்ஞ்சிறை, வேர்த்தலை, வேர்ந்தலை, வேர்ப்புறம்மஃ, வேர்ம்புறம்
வீழ்
வீழ்க்குறை, வீழ்ங்குறை, வேர்ச்சிறை, வேர்ஞ்சிறை, வேர்த்தலை, வேர்ந்தலை, வேர்ப்புறம், வேர்ம்புறம் – 48

குறில் எழுத்தை அடுத்து ர் ழ் எழுத்து வருவதுல்லை – 49


நூற்பா மூலம்

ய, ர, ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற,
க, ச, த, ப, ங, ஞ, ந, ம ஈர் ஒற்று ஆகும்.       48.    
         
அவற்றுள்,
ரகார, ழகாரம் குற்றொற்று ஆகா.  49.

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.