Friday, 13 April 2018

தொல்காப்பியம் எழுத்துமொழி Tolkappiyam Tamil Linguistics 13

ஒரு எழுத்து மட்டும் ஒரு பொருளை உணர்த்தும் சொல்லாக இருக்கும்.
அப்படிச் சொல்லாக அமையும் எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள் ஏழு கொண்ட உயிரும், சில உயிர்மெய் நெடிலும் ஆகும் – 43 , கா

குறில் எழுத்து பொருளை உணர்த்தும் ஒரு சொல் ஆவதில்லை – 44

ஓரெழுத்து ஒருமொழி -
ஈரெழுத்து ஒருமொழி – கல் (கல்லின் என்பது போல் புணர்ச்சியில் மாறுபடுபவை)
தொடர்மொழி (இரண்டுக்கு மேற்பட்ட எழுத்து கொண்டவை)
என்று சொல்லை மூன்று நிலையினவாகக்  கொள்ள வேண்டும். – வரகு, கொற்றன் 45


நூற்பா மூலம்

எழுத்துக்கள் தொடர்ந்து மொழியாதல்

நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி.  43.  
         
குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே. 44.  
         
ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,
மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே.  45.   
          
தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.