Friday, 13 April 2018

தொல்காப்பியம் ஆய்தம் Tolkappiyam Tamil Linguistics 11

ஆய்த எழுத்து

எஃகு, கஃசு - என்பது போல்
வல்லின உகரமாகிய கு சு டு து பு று என்னும் ஆறு எழுத்துகள்
தன்மேல் வர
ஆய்த எழுத்து
தொடராக வரும். - 38

கஃறீது,
முஃடீது 
- என்பது போல்
ஈற்றெழுத்து இசையில்
புணர்மொழி ஆய்தம் தோன்றும். - 39

கஃறென்றது - என்று உருவைக் குறிப்பிடும்போதும்
சுஃறென்றது - என்று இசையைக் குறிக்கும்போதும்
ஆய்த ஒலி குறைவதில்லை. - 40

நூற்பா மூலம்

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி,
உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே.   38.

ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். 39.   

உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா-
ஆய்தம் அஃகாக் காலையான.       40.

தொல்காப்பியம் - 1 எழுத்ததிகாரம் - 2 மொழி மரபு (சொல்லில் எழுத்தொலி அமையும் வழக்கம்)

No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.