Monday, 9 April 2018

பொய்யாமொழிப் புலவர் Kongu-mandala-sathagam 97

கொங்கு மண்டல சதகம் 97

பொய்யாமொழிப் புலவர் காட்டு வழியில் சென்றுகொண்டிருந்தார். 
முருகப் பெருமான் வேடன் வடிவில் அவரிடம் வந்தார். 
"உன் பெயர் என்ன" புலவர் வினவினார். 
"முட்டை" முருகன் விடை பகர்ந்தார். 
"உடன்போக்கு அகத்துறை அமைத்து ஒரு வெண்பா பாடு" முருகன் கேட்டார். 
புலவர் பாடினார். 

பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே
என்பேதை சொல்லற்(கு) இசைந்தனளே - மின்போலும் 
மானவேள் முட்டைக்கு மாறாய தெவ்வர் போம்
கானவேல் முள் தைக்கும் காடு. 

இந்தப் பாடல் அத்துணைச் சிறப்புடைதாக இல்லை என்று கூறிய முருகன் தான் ஒரு பாடலைப் பாடிக்காட்டினார். 

விழும் துளி இந்தரத்தே வேம் என்றும் வீழின்
எழுந்து சுடர் சுடும் என்று ஏங்கிச் - செழுங்கொண்டல் 
பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றாளே
பொய்யா மொழிப் பகைவர் போல். 

இப்படிப் பாடிய இடம் திருமுருகன் பூண்டி. 
இந்த இடம் இருப்பது கொங்குமண்டலம்.  

முட்டை என் பேர் சுரம்போக்கா ஒரு பாமொழி எனக்கேட்டு
இட்டமுறு பொய்யாமொழி பொன்போல் எனவுரைக்கச்
சுட்டழகில்லை ஈதென்று விழுந்ததுளி என்று நன்
மட்டவிழ் தார் முருகோன் சொன்னதும் கொங்கு மண்டலமே.  97

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.