Wednesday, 4 April 2018

நல்லதம்பிக் காங்கேயன் Kongu-mandala-sathagam 64


கொங்கு மண்டல சதகம் 64

உலகம் புகழும் குன்றத்தூரில் (சங்கரி துர்க்கம்) வாழ்ந்த ஆயர் குலத்தவர் நல்லதம்பிக்  காங்கேயன்.
இவர் எம்பெருமான் என்பவரைக் கொண்டு இராமாயணம் பாடச் செய்தார்.
தக்கை என்னும் பறையை அடித்துக்கொண்டு இசையோடு இவர் பாடிய இராமாயணம் தக்கை இராமாயணம் எனப்பட்டது. 
இவர்கள் வாழ்ந்தது கொங்குமண்டலம்.  

அம்புவி மெச்சு குன்றத்தூரில் ஆயரில் ஆய்கலைதேர்
எம்பெருமானைக் கொடு தக்கை என்னும் இசைத்தமிழால்
நம்பும் இராம கதையை அன்பாக நவிலவிசை
வம்பவிர் தார்ப் புயனல்லயனும் கொங்கு மண்டலமே. 64

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.