Tuesday, 3 April 2018

அசதி Kongu-mandala-sathagam 45


கொங்கு மண்டல சதகம் 45

தெய்வத் தமிழ்ப் புலவர்கள் நாள்தோறும் எண்ணும் புலவர் பெருமாட்டி ஔவையார்.
அவர் அசதிக்கோவை என்னும் நூலினைப் பாடினார்.
இந்த நூல் அசதி என்னும் இடையன்-மீது பாடப்பட்டது.
இவன் வாழ்ந்த ஊர் ஐவேலி.
இந்த ஐவேலி இருப்பது கொங்குமண்டலம்.  

கொங்கு நாட்டில் குன்றத்தூர் கூற்றத்தில் உள்ளது சங்ககிரி.  
இதன் மலைமேல் ஏழு சுற்றுள்ள கோட்டை உள்ளது.
இதன் கிழக்கில் ஐவேலி என்னும் ஊர் உள்ளது.
இந்த ஊரில் வாழ்ந்த இடையன் அசதி.
ஒருநாள் இரவு இந்த அசதி ஔவைக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான்.
இதனைப் போற்றி ஔவையார் இவன்மீது கோவை-நூல் ஒன்று பாடினார்.
இது அசதிக்கோவை என்னும் சிற்றிலக்கியம்.

தெய்விகமான தமிழ்ப் புலவோர்கள் தினம் உளங்கொள்
பொய்தீர் உரை எம்பிராட்டியார் ஔவை புனைந்து புகழ்
செய் கோவை யேற்ற திறலோன் அசதி செழித்து வளர்
மைதாழ் பொழில் திகழ் ஐவேலியும் கொங்கு மண்டலமே.  45

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.