Tuesday, 3 April 2018

வையாவிக் கோப்பெரும்பேகன் Kongu-mandala-sathagam 44

பேகன்


பேகன்

கொங்கு மண்டல சதகம் 44

வையாவிக் கோ பெரும் பேகன் என்பவன் ஒரு பெருவள்ளல். அவன் காட்டு மயில் மீது இரக்கம் கொண்டு தன் ஒழுக்கலாறு (கை) நிறைவுறும்படி தன் ஆடையை வழங்கினான். இது ஆண்மைக்குக் கருணை வைப்பு (கருவூலம்). இவன் தருமன் எனப் போற்றத்தக்கவன். இவன் வாழ்ந்த வையாபுரிக் கோநகரம் இருப்பது கொங்குமண்டலம்.  

கையாரக் கான மயிலுக்கு இரங்கிக் கலிங்கம் அருள்
செய் ஆண்டகை கருணைக்கு வைப்பாகத் திகழ் தருமன்
வையாவிக் கோப்பெரும் பேகன் எனும் பெரு வள்ளல் தங்கு
வையாபுரி எனும் கோநகரும் கொங்கு மண்டலமே. 44

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.