Tuesday, 3 April 2018

ஓரி Kongu-mandala-sathagam 43

ஓரி


ஓரி

கொங்கு மண்டல சதகம் 43

கொல்லிமலை நாட்ட ஆண்டவன் ஓரி.
இவன் அல்லும் பகலும் அயராது தமிழ்மொழி வளர்க்கும் புலவர்களுக்கு பொன்னைச் சுரந்து வரையாது வங்கினான்.
இவனது கொல்லிமலை நாட்டைக் கைப்பற்ற மூவேந்தரும் விரும்பினர்.

விரையார் தொடையணி மூவேந்தர் ஆசை மிகுந்து நச்சத்
தரைமீது எலாவளமும் செறி கொல்லித் தட வரையான்
துரையாய்த் தமிழ்மொழிக்கு அல்லும் பகலும் சுரந்து செம்பொன்
வரையாது அளித்த நல் ஓரி வள்ளல் கொங்கு மண்டலமே. 43

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.