Tuesday, 3 April 2018

அதியமான் Kongu-mandala-sathagam 42

அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி தருதல்


கொங்கு மண்டல சதகம் 42

சாதலை நீக்கும் அரிய நெல்லிக்கனி ஒன்றை ஒருவர் அதியமானுக்குக் கொடுத்தார்.
அதியமான் அதனை ஔவையாருக்குக் கொடுத்தான்.
அதியமான் முன்னோர் வெளிநாட்டிலிருந்து கரும்பினைக் கொண்டுவந்து பயிரிட்டனர்.
இப்படிப்பட்ட அதியமானின் கோட்டை இருப்பது கொங்குமண்டலம்.

சாதலை நீக்கும் அருநெல்லி தன்னைத் தமிழ் சொல் ஔவைக்கு
ஆதரவோடு கொடுத்தவன் கன்னலை அங்கு நின்று
மேதினி மீதிற் கொடு வந்து நட்டவன் மேன் மரபோர்
மாதிரம் சூழ் அரண் மேவுவதும் கொங்கு மண்டலமே. 42

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.