Tuesday, 3 April 2018

குமணன் Kongu-mandala-sathagam 41

குமணன்


கொங்கு மண்டல சதகம் 41

குமணன் நாட்டை அவன் தம்பி கைப்பற்றிக்கொண்டான்.
அதனால், குமணன் காட்டுக்குச் சென்று தலைமறைவாக வாழ்ந்துவந்தான்.
குமணன் ஒரு கொடைவள்ளல்.
புலவர் பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் கண்டு பரிசில் வேண்டினார்.
“என் தலையை வெட்டி எடுத்துக்கொண்டுபோய் என் தம்பியிடம் கொடுத்து அதற்குப் பரிசாக ஆயிரம் பொன் பெற்றுக்கொள்க” என்று கூறிக் குமணன் தன் வாளைப் புலவர் கையில் கொடுத்தான்.
இந்தக் குமணன் வாழ்ந்தது கொங்குமண்டலம்.

நாட்டினைத் தம்பி கொளக் காடு சென்று நலிவுறுநாள்
பாட்டிசைத்தோர் புலவன் வேண்ட என்தலை பற்றியறுத்து
ஈட்டி என் தம்பியிடத்து ஈயில் கோடி பொன் எய்துமென்று
வாட்டங் கைத் தருமக் குமணன் கொங்கு மண்டலமே.  41

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.