Monday, 2 April 2018

கோசர் Kongu-mandala-sathagam 40




கொங்கு மண்டல சதகம் 40

கோசர் நல்ல மனமுடையவர்கள்.
பலரும் போற்ற வாழ்ந்தவர்கள்.
தமிழ்த்தாய் அணிந்து மகிழ எல்லா அணிகலன்களையும் சூட்டியவர்கள்.
தமிழ் கனிந்து வளர்ந்தோங்கச் செய்யும் கருத்து உடையவர்கள்.
இவர்கள் இருந்து ஆட்சி புரிந்த நாடு கொங்குமண்டலம்.

பனிமிகு நீள்கடல் சூழ் மேதினியில் பலரும் மெச்ச
இனிமை தரும் தமிழ்மாது களிப்புற்று எலாவணியும்
கனிவுறப் பூண்டு வளர்ந்தோங்கச் செய்யும் கருத்தோடு நன்
மனம் மிகு கோசரும் வாழ்ந்து ஆண்டதும் கொங்கு மண்டலமே. 40

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


No comments:

Post a Comment

Blog Archive


இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரையில் பிழையைத் திருத்திக்கொள்ளலாம்.